• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தடுப்பு மருந்து அணுகலில் பன்னாட்டுச் சமநிலையின்மையை எப்படிச் சரிசெய்வது

தடுப்பு மருந்து அணுகலில் பன்னாட்டுச் சமநிலையின்மையை எப்படிச் சரிசெய்வது

தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து

இப்போது உலகுக்கு மிகவும் தேவைப்படும் குணங்கள் இவைதான். 2021ன் இரண்டாம் பாதி முழுவதும் தடுப்பு மருந்து வழங்கலில் 25% குறையும் என்று IAVG கணித்துள்ளது. இதனால், உலகம் தன் வளங்களை திசைமாற்றவேண்டும், குறைந்த தடுப்பு மருந்துப் பாதுகாப்பைக் கொண்ட நாடுகளுக்கு உதவவேண்டும்.

  • Share this:
    சமீபத்தில், 85 கோடி தடுப்பு மருந்துகளை வழங்கிய மைல்கல்லைக் கடந்தது இந்தியா. இந்தியா தடுப்பு மருந்து வழங்கும் தன்னுடைய வேகத்தை இதேபோல் தொடர்ந்தால், வயதுவந்த குடிமக்கள் அனைவருக்கும் கோவிட்-19க்கு எதிரான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டின் தொடக்கத்துக்குள் வழங்கப்பட்டுவிடும். இந்த வெற்றிகளின் ஒரு முக்கியமான பங்கு, நம்முடைய உள்நாட்டுத் தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களான SII மற்றும் பாரத் பயோடெக்-கின் செயல்திறனுக்கும், ஃபெடரல் வங்கி நிறுவனத்தின் ஒரு CSR முன்னெடுப்பான நெட்வொர்க்18 சஞ்சீவனி: உயிர் தரும் ஓர் ஊசி போன்ற மிகப் பெரிய தடுப்பு மருந்து விழிப்புணர்வு முயற்சிகளுடைய வீச்சுக்கும் உண்டு.

    ஆனால், நம்மைப் போன்ற ஒரு பன்னாட்டுப் பொருளாதாரம், அதிலும் குறிப்பாக, ‘வசுதேவ குடும்பகம்' என்ற மதிப்பீடுகளில் கட்டமைக்கப்பட்ட ஒரு பண்பாடாகிய இந்தியாவின் கவலைகள் இப்போது உலக அளவில் விரிவடையவேண்டும், பன்னாட்டு அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் தடுப்பு மருந்து அணுகலில் உள்ள வளர்ந்துவருகிற, வைரஸின் புதிய வேறுபாடுகளை உண்டாக்கப்போவதாக அச்சுறுத்துகிற சமநிலையின்மையை எண்ணி நாம் கவலை கொள்ளவேண்டும்.

    இந்தச் சமநிலையின்மையைச் சரிசெய்வதற்கான முதன்மைச் செயல்பாடுகளில் ஒன்று, WHOன் சுதந்தரப் பகிர்ந்து கொடுத்தல் தடுப்பு மருந்துக் குழு (IAVG) பரிந்துரைக்கிற வழி, தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கிற, உயர்ந்த பாதுகாப்பு கொண்ட நாடுகள் தடுப்பு மருந்துச் சமநிலை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தல் COVAXIN தடுப்பு மருந்து வழங்கல் ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை கிடைக்க அனுமதிப்பதன்மூலம், மிகுந்த கெட்டுப்போதல் மற்றும் வீணாதலுக்கு வழிவகுத்திருக்கிற, தடுப்பு மருந்துகளைக் குறித்துவைக்கிற அல்லது பதுக்கிவைக்கிற செயலைத் தடுப்பதன்மூலம் அவர்கள் இதைச் செய்யலாம். இந்தச் சரிசெய்தல் முயற்சிகளில் இந்தியாவும் பங்குபெறுகிறது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவையும் கொண்ட க்வாட் குழு நாடுகளுடைய ஒரு பகுதியாக, 120 கோடி தடுப்பு மருந்துகளை நன்கொடையாக அளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது. குறுகிய பகுதி அல்லது நாட்டுக் கவலைகளைத் தாண்டிப் பொது நன்மைக்காக உழைக்கும் இந்தியாவின் விருப்பத்தை இது காண்பிக்கிறது.

    நாடுகளுக்குப் பொருளளவில் உதவுவதுடன், தடுப்பு மருந்துத் தயக்கத்தை வெல்வது எப்படி, பெரும் எண்ணிக்கையிலான தடுப்பு மருந்து முயற்சிகளைச் செயல்படுத்துவது எப்படி என்பனவற்றுக்கான பயனுள்ள ஒரு சூழல் ஆய்வையும் இந்தியா வழங்குகிறது. தடுப்பு மருந்து விழிப்புணர்வை, அனைத்து இந்தியர்களுக்கும் அணுகலைப் பரப்புவதற்கு உதவும் ஃபெடரல் வங்கி நிறுவனத்தின் ஒரு CSR முன்னெடுப்பான நெட்வொர்க்18 சஞ்சீவனி: உயிர் தரும் ஓர் ஊசி திட்டத்தின் அனுபவங்கள், தனியார் அமைப்புகள், NGOக்கள் மற்றும் குடிமையியல் சமூகம் ஆகியவை தவறான தகவல்களால் உண்டாகும் தடைகளை உடைப்பதில் பயனுள்ள தோழர்களாக இருக்கலாம் என்பதைக் காண்பித்துள்ளன. ஒட்டுமொத்த எண்ணத்தின் முக்கியத்துவத்தையும் இது காண்பித்துள்ளது, குடும்பங்கள் மற்றும் சமூகங்களைப் பாதுகாக்கிற ஒரு தேசிய முயற்சியின் பகுதியாகத் தடுப்பு மருந்துகளை இது முன்னிறுத்தலாம். ஆனால், அனைத்தையும்விட முக்கியமாக, சிறிது துணிவு மற்றும் உறுதியால் சாதிக்க இயலாத மிகப் பெரிய இலக்கு என்று ஏதும் இல்லை என்பதை இது காண்பித்துள்ளது.

    இப்போது உலகுக்கு மிகவும் தேவைப்படும் குணங்கள் இவைதான். 2021ன் இரண்டாம் பாதி முழுவதும் தடுப்பு மருந்து வழங்கலில் 25% குறையும் என்று IAVG கணித்துள்ளது. இதனால், உலகம் தன் வளங்களை திசைமாற்றவேண்டும், குறைந்த தடுப்பு மருந்துப் பாதுகாப்பைக் கொண்ட நாடுகளுக்கு உதவவேண்டும். தனிப்பட்ட குடிமக்கள் என்றமுறையில், தடுப்பு மருந்துச் சமநிலை மற்றும் பன்னாட்டு ஒற்றுமை லட்சியங்களை நாம் ஆதரிக்கவேண்டும். நலன் மற்றும் நோயெதிர்ப்பாற்றல் ஆகிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களை அணுகுவதற்கு நாம் உதவவேண்டும். ஏனெனில், இந்த நோய்ப்பரவல் இன, பண்பாட்டு அல்லது மத வேறுபாடு பார்ப்பதில்லை. கோவிட்-19 தடுப்பு மருந்து தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் தகவல்களை அறிய, ஃபெடரல் வங்கி நிறுவனத்தின் ஒரு CSR முன்னெடுப்பான நெட்வொர்க்18 சஞ்சீவனி: உயிர் தரும் ஓர் ஊசி-ஐப் பின்தொடருங்கள், இன்னும் நலமான, இன்னும் பாதுகாப்பான, இன்னும் நியாயமான ஓர் உலகத்தை வடிவமைக்க உதவுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: