சஞ்சீவனி - எ ஷாட் ஆஃப் லைஃப்: நெட்வொர்க் 18, பெடரல் பேங்க் இணைந்து நடத்தும் கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு இயக்கம்

சஞ்சீவனி - எ ஷாட் ஆஃப் லைஃப்: நெட்வொர்க் 18, பெடரல் பேங்க் இணைந்து நடத்தும் கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு இயக்கம்

நெட்வொர்க் 18 நடத்தும் கொரோனா தடுப்பூசி இயக்கம்.

ஏப்ரல் 7, 2021 உலக சுகாதார தினமாகும். அன்றைய தினத்தில் நெட்வொர்க் 18 தனது புதிய கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு இயக்கமான சஞ்சீவனி எ ஷாட் ஆஃப் லைஃப் ('Sanjeevani – A Shot Of Life’) என்பதை அறிமுகம் செய்கிறது.

  • Share this:
ஏப்ரல் 7, 2021 உலக சுகாதார தினமாகும். அன்றைய தினத்தில் நெட்வொர்க் 18 தனது புதிய கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு இயக்கமான சஞ்சீவனி எ ஷாட் ஆஃப் லைஃப் ('Sanjeevani – A Shot Of Life’) என்பதை அறிமுகம் செய்கிறது.

இதன் மூலம் கோவிட்-19 நோய் தன்மை மற்றும் வாக்சின் போட்டுக்கொள்வதன் அவசியம் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய ஜனத்திரளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த முதல் கட்டத்தில் 3 கோடி சுகாதாரப் பணியாளர் மற்றும் முன்னிலை களப்பணியாளர்களுக்கு வாக்சின் போடப்பட்டது. இந்தியாவில் 2 கொரோனா வைரஸ் தடுப்பூசி உள்ளது, ஒன்று கோவிஷீல்ட், மற்றொன்று கோவாக்சின்.

இந்த இரண்டு தடுப்பூசிகளுக்குமே தேசிய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அவசரநிலை அனுமதியளித்தது. சுகாதார பணியாளர் ஒருவருக்குத்தான் முதன் முதலில் இந்த தடுப்பூசிப் போடப்பட்டது.

மார்ச் 1 முதல் 60வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 முதல் 59 வயது உடையோர், அதாவது பிற நோய்கள் உள்ளவர்களுக்கு கொரொனா தடுப்பூசி போட்டிக் கொள்ள தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி மார்ச் 28ம் தேதி வரை இந்தியாவில் கொரோனா அதிகரிப்பையும் மீறி 2,60,653 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினத்தில் நெட்வொர்க் 18 மற்றும் பெடரல் பேங்க் கூட்டிணைந்து சஞ்சீவனி கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை அமிர்தசரஸில் தொடங்குகிறது. இதில் பாலிவுட் நடிகர் சோனு சூட் பெரிய அளவில் பங்களிக்கிறார். இவர் இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் தூதராகச் செயல்படுவார். அறிமுகத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக நடிகர் சோனு சூட் கொரோனா வாக்சின் எடுத்துக் கொள்கிறார்.

இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 66% மக்கள் அணுக முடியாத தொலைதூர கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால் நெட்வொர்க் 18 அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் விரைவில் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதலே லட்சியம்.

இதற்காக இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள அமிர்ந்தசரஸ், இந்தூர், நாஷிக், குண்டூர், தக்‌ஷின கன்னடா ஆகிய 5 மாவட்டங்களை தத்து எடுத்து இந்த மாவட்டங்களின் கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

சஞ்சீவனி கே காடி அதாவது சஞ்சீவனை நோய்த்தடுப்பு வேன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும். கொரொனா வாக்சின் பற்றிய வதந்திகளையும் தவறான தகவல்களையும் உடைத்தெறிந்து நற்செய்தியை மக்களிடையே கொண்டு செல்லும்.

இந்த சஞ்சீவனி கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு இயத்தில் இணைந்து இந்த 9 மாத கால பணியை வெற்றி பெறச் செய்யுமாறு அழைக்கிறோம்.
Published by:Muthukumar
First published: