கோவில்பட்டி ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு - முழு பாதுகாப்புடன் முடி திருத்தும் பணிகள்

கோவில்பட்டி ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு - முழு பாதுகாப்புடன் முடி திருத்தும் பணிகள்

கோ[புப் படம்

கடந்த 2 மாதங்களாக முடிவெட்டமால் சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று கிராம பகுதியில் கடைகள் திறந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாதுகாப்பான முறையில் முடிதிருத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
ஊரக பகுதிகளில் இன்று முதல் சலூன் கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டியில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. 

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 55 நாள்களுக்கு மேலாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. டீக்கடை முதல் பல தொழிற்சாலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையில் முடித்திருத்துவோர், தங்களுக்கும் அனுமதி வேண்டும். வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்படலாம். பாதுகாப்பான முறையில் பணிகளை செய்ய வேண்டும். 5 முறை கிருமிநாசினி தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பல்வேறு கிராமங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கடைகளுக்கு வருபர்களுக்கு கிருமி நாசினி தடுப்பு மருந்து வழங்குகின்றனர். மேலும் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே முடிதிருத்தம் செய்கின்றனர். ஒவ்வொருக்கும் தனித்தனி துணிகளை மட்டுமே பயன்படுத்தி முடிதிருத்தம் செய்து வருகின்றனர்.

சில கிராமங்களில் வீடுகள் அருகே முடித்திருத்தம் பணிகளை முடிதிருத்துவோர் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 55 நாள்களுக்கு மேலாக தங்களுடைய வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஊராக பகுதியில் திறக்க அரசு அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசு சொன்ன நிபந்தனைகளுடன் பணிகளை செய்து வருவதகாவும்,  தங்களை போன்று நகர பகுதிகளில் உள்ள சலூன் கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களாக முடிவெட்டமால் சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று கிராம பகுதியில் கடைகள் திறந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாதுகாப்பான முறையில் முடிதிருத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாக முடி திருத்த வந்த வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published: