சேலம் உருக்கு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தீவிரம்

சேலம் உருக்கு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தீவிரம்

சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கலனிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருவதாக  சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கலனிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருவதாக  சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

 • Share this:
  சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கலனிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருவதாக  சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

  கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டரின் தேவையும் உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் பலவற்றியிலும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

  சேலம்  இரும்பு உருக்கு ஆலையில் தற்போது ‘இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு, மருத்துவத்துக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சேலம் உருக்கு ஆலையில் மாவட்ட ஆட்சியர் ராமன் நேற்று ஆய்வு  மேற்கொண்டார்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளதாகவும் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும்  முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் ஏற்கனவே அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், “ சேலம் மாவட்டத்தில் கொரானா நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அரசு அனுமதி அளித்துள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது . நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உடனுக்குடன் வழங்க தேவையான அளவு இருப்பில் உள்ளது .

  இத்தேவைக்காக சேலம் JSW நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ பயன்பாட்டிற்கான 14,000 லிட்டர் ஆக்ஸிஜன் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதோடு அவசர தேவைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் 25,000 லிட்டர் ஆக்ஸிஜன் பெறப்பட்டு மருத்துவ மனைகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

  சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கலனிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் விரைவில் மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கூடுதல் தேவைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: