ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து மாட்டிக்கொண்ட கொரோனா நோயாளிகள்..!

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து மாட்டிக்கொண்ட கொரோனா நோயாளிகள்..!
பிரியாணி
  • Share this:
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து மாட்டிக்கொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் பன்னிரெண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4895 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

சேலத்தில் உள்ள மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் 4 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்றிரவு அங்கு பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் டெலிவரி செய்ய ஒருவர் வந்துள்ளார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் உணவு டெலிவரி செய்ய வந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


அவர் மேற்கொண்ட விசாரணையில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகள் தான் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்தார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நோயாளிகளை எச்சரித்த மருத்துவர்கள், உணவு கொண்டு வந்தவரை திருப்பி அனுப்பினர்.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading