Wriddhiman Saha | விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்- அறிகுறி இல்லாமலே தொற்று

சஹாவுக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்.

விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரியவந்துள்ளது. 

  • Share this:
    ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளது. தனிமையில் இருக்கும் போதே இரண்டாவது முறையாக கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

    கடந்த முறையாவது கடும் உடல்வலி, காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தன. இந்த முறை ஒரு கொரோனா அறிகுறிகளும் இல்லாமலேயே பாசிட்டிவ் ஆகியுள்ளது.

    டெல்லியில் தனிமையில் இருக்கும் சஹா அங்கேயே இருக்கப் போவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் இன்னொரு டெஸ்ட் எடுத்து அதில் நெகெட்டிவ் என்று வந்தால் அவரை தனிமையிலிருந்து விடுவிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    முதன் முதலில் கொரோனா தொற்றிய போது கடுமையாக பயந்து போனதாகக் கூறினார் சஹா.

    “நிச்சயம் முதல் முறை வந்த போது நான் பயந்துதான் போனேன், ஒரு வைரஸ் பூமியையே நிச்சலனமாக்கியுள்ளது. அந்த வைரஸ் என்னைத் தொற்றும்போது பயப்படாமல் எப்படி இருக்க முடியும்?

    குடும்பத்தினர் அனைவரும் கவலைப்பட்டனர், நான் வீடியோ வெளியிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். இப்போது பயப்பட தேவையில்லை என்று தோன்றுகிறது. என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

    மே மாதம் முதல் நாள் நான் பயிற்சி முடித்து விட்டு மிகவும் களைப்பாக இருந்தது. சளி பிடித்திருந்தது. லேசான இருமல் இருந்தது. அணி மருத்துவரிடம் அப்போதே சொன்னேன். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, அதனால் தனியாக இருந்தேன். அதே நாளில் கோவிட்-19 டெஸ்ட் எடுத்தனர்.” என்று முதலில் கொரோனா தொற்றும்போது கூறியிருந்தார்.

    நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் சஹா இடம்பெற்றுள்ளார். அதன் பிறகான 5 டெஸ்ட்கள் கொண்ட அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

    இப்போது அவர் இங்கிலாந்து செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

    இங்கிலாந்து தொடருக்காக மும்பையில் வீரர்கள் கூடும்போது கொரோனா பாசிட்டிவ் என்றால் அவர்கள் இங்கிலாந்து செல்ல முடியாது என்பதை பிசிசிஐ ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டது.

    ஆகவே சஹாவுக்கு இன்னொரு சோதனையில் நெகெட்டிவ் என்று வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
    Published by:Muthukumar
    First published: