கொரோனா தொற்று : முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி

சகாயம் ஐஏஎஸ்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான ‘சகாயம் அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிட்டது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதனால்  சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சகாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பப்பட்டு வருகின்றது.

  தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதன்படி நேற்று ஒரேநாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 07 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது. 25,598 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  நேற்று ஒரே நாளில் 1,809 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 68 ஆயிரத்து 722 ஆக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

  Must Read :  கொரோனா கவச உடை அணிந்து ஜனநாயக கடமையாற்றிய கனிமொழி

   

  இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: