கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சச்சின் ரூ.50 லட்சம் உதவி!

உலக அளவில் விளையாட்டு அமைப்புகள் பல்வேறு நாடுகளுக்கு நிதி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சச்சின் ரூ.50 லட்சம் உதவி!
சச்சின் டெண்டுல்கர்
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் நிதிவுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சமும், மகாராஷ்டிர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.

இதேபோன்று, உலக அளவில் விளையாட்டு அமைப்புகள் பல்வேறு நாடுகளுக்கு நிதி வழங்கியுள்ளன. இதில், பிரான்சில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணியான பிஎஸ்ஜி, இந்திய மதிப்பில் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.


இந்த அணி வீரர்களின் ஜெர்ஸியை இணையதளம் மூலம் விற்று சேகரித்த இந்த நிதி, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Also see...



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




 
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading