ரஷ்ய அதிபருக்காக அமைக்கப்பட்ட கிருமிநாசினி பாதை
கொரோனா தொற்றிலிருந்து ரஷ்ய அதிபர் புதினை பாதுகாப்பதற்காக கிருமிநாசினி பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின்
- News18 Tamil
- Last Updated: June 18, 2020, 4:05 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு தொடர்ந்து தொற்று பரவி வருவதால் அதிபர் புதினை சந்திக்க வரும் பார்வையாளர்கள் மூலம் அவருக்கு கொரோனா பரவுவதை தடுக்க கிருமிநாசினிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள புதினின் இல்லத்திலும், கிரெம்ளின் மாளிகையிலும் இந்த கிருமி நாசினிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Also read... மீண்டும் வெற்றிபெற சீனாவை நாடிய டிரம்ப்...? சர்ச்சை புத்தகத்திற்கு திடீர் தடை
இதிலிருந்து வெளியாகும் கிருமிநாசினி பார்வையாளரின் உடல் மற்றும் உடை மீது மூடுபனியைப் போல செயல்பட்டு தொற்று பரவலைத் தடுக்கும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.