உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி - ரஷ்யா

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சகம், வரும் அக்டோபரில் பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி - ரஷ்யா
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 3, 2020, 7:04 AM IST
  • Share this:
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. தற்போது 20-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் உள்ளன.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளதாகவும், தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட பரிசோதனையில், தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்ததாகவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் அது பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அறிவியல் மற்றும் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டு இதை கவுரவ பிரச்னையாக பார்க்கும் ரஷ்யா அவசரகதியில் தடுப்பூசியை அறிவிப்பதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நடப்பாண்டு இறுதியில் பாதுகாப்பான, திறன்மிக்க தடுப்பூசியை தாங்கள் உருவாக்குவோம் என அமெரிக்கா கூறிவருகிறது. இதனிடையே, பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை,ரஷ்ய உளவாளிகள் இலக்கு வைப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் ரஷ்யா மறுத்தது.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading