கொரோனா தடுப்பு மருந்து வெளியீடு எப்போது? ரஷிய அரசு விளக்கம்

கொரோனாவுக்கான மருந்தை அடுத்த மாதம் வெளியிடுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து வெளியீடு எப்போது? ரஷிய அரசு விளக்கம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 16, 2020, 9:27 PM IST
  • Share this:
கொரோனா மருந்து கண்டுபிடிப்பிற்கான முதற்கட்ட சோதனையில், ரஷ்யா வெற்றி கண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட சோதனை ஆகஸ்ட் 3-ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்தநிலையில் மூன்றாம் கட்ட சோதனை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனையில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருந்து பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியிடப்பட்டு ரஷ்யாவில் அனுமதிக்கப்படும் எனவும், சில நாடுகளில் செப்டம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்படலாம் எனவும் ரஷ்யன் நேரடி முதலீடு அமைப்பின் தலைவர் கிரில் திமித்ரீவ் தெரிவித்தார்.

படிக்க: கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வாழ்த்தும் ரசிகர்கள்


படிக்க: BREAKING | தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று
இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திமித்ரீவ் குறிப்பிட்டுள்ளார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading