ஹோம் /நியூஸ் /கொரோனா /

RSS : கொரோனா 3ஆவது அலை... ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி

RSS : கொரோனா 3ஆவது அலை... ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி

ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் மக்களுக்கு உதவ ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக ஓய்ந்து வரும் நிலையில், மூன்றாவது அலை தாக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மூன்றாவது அலையின் போது, குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ்வாறு, மூன்றாவது அலை ஏற்பட்டால் அப்போது மக்களுக்கு உதவுவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, மக்களுக்கு உதவுவதற்காக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம் ஆகஸ்டு முதல் தேதி சில பகுதிகளில் தொடங்கும் என்றும், அடுத்த சில நாட்களில் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டு ஆகஸ்ட்டு இறுதிக்குள் இந்த பயிற்சி முடிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

அப்போது, கொரோனாவில் சிக்கியுள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு உதவுவது தொடர்பாகவும், தொற்று ஏற்படும் நேரத்தில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பயிற்சி வழங்கப்படும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய பிரசார பிரமுகர் சுனில் அம்பேத்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்களை தொடங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டது. மேலும், 219 நகர மருத்துவமனைகளில் அரசுக்கு உதவிபுரிந்தததாகவும் அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்திருந்தார்.

Read More : தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையக்கப்படுத்தும் பணி நடக்கிறது: கனிமொழி தகவல்

மேலும், ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்து காலக்கட்டங்களிலும் அளிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியதாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தம் உயிரை பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் உதவிபுரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Must Read : மேகதாதுவில் அணைகட்ட கூடாது... கடைமடை மாநிலத்துக்கு தான் அதிக உரிமை உள்ளது - ஜி.கே மணி

அத்துடன், கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை மையம், ஆயுர்வேத மூலிகைகள் விநியோகம், ரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம் உள்ளிட்ட 12 வகையான சேவைகளை செய்ததாகவும். அதேபோல பிற நிறுவனங்களின் சேவைகளிலும் ஆர்.எஸ்.எஸ். உதவிக்கரம் நீட்ட்டி வந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Covid-19, RSS