CoronaVirus : கொரோனா தடுப்பு பணியில் ஆர்.எஸ்.எஸ். : 43 நகரங்களில் சேவை நிலையங்கள்

ஆர்.எஸ்.எஸ்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். இறங்கி இருப்பதாகவும், அதற்காக 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்களை தொடங்கியுள்ளதாகவும் அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்துளார்.

  • Share this:
    கொரோனாவை தடுக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) இறங்கியுள்ளது. அதற்காக 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்களை தொடங்கியுள்ளது. மேலும், 219 நகர மருத்துவமனைகளில் அரசுக்கு உதவிபுரிந்து வருவதாக அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்துளார்.

    இதுகுறித்து சுனில் அம்பேத்கர் காணொளியில் பேசினார். அப்போது அவர், நாட்டின் பல பகுதிகளில் கொரோனாவால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால், ஆர்.எஸ்.எஸ். சார்பில் 43 முக்கிய நகரங்களில் கொரோனா சேவை நிலையங்கள் துவங்கி செயல்படுவதாகவும், 219 மருத்துவமனைகளில் அதன் தொண்டர்கள் அரசுக்கு உதவுவதாகவும் கூறினார்.

    மேலும், ‘ஆர்எஸ்எஸ், சேவா பாரதி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பொதுமக்களுக்கான சேவை அனைத்து காலக்கட்டங்களிலும் அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம். எங்கள் தொண்டர்கள் தம் உயிரை பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் உதவிபுரிந்து வருகின்றனர்.

    தேவைக்கு ஏற்றார்போல கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை மையம், ஆயுர்வேத மூலிகைகள் விநியோகம், ரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம் உள்ளிட்ட 12 வகையான சேவைகளை செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மாவட்ட அரசு நிர்வாகங்களுக்கு தொண்டர்களும் பெரும் உதவி புரிகின்றனர். அதேபோல பிற நிறுவனங்களின் சேவைகளிலும் ஆர்.எஸ்.எஸ். உதவிக்கரம் நீட்ட்டி வருகின்றது.

    மத்தியபிரதேசத்தில் ராதா ஸ்வாமி சத் சங் எனும் மார்க அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட, 2000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைக்கு மற்ற அமைப்புகளுடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ். உதவியது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியிலும் ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது. அதன்படி, நாட்டின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்களை ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ளது. இதுவரையும் அதன் சார்பில் 2,442 தடுப்பூசி நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.” என்று கூறினார்.

    Must Read : வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவுகின்றன, நன்றி, ஆனால் இதற்காக மோடியைப் புகழ்வதா?, இது அவரது திறமையின்மையின் விளைவுதானே- சோனியா காந்தி சாடல்

     

    அத்துடன், “புனேவில் தொண்டர்களின் விழிப்புணர்வு முகாம்களால், 600 பிளாஸ்மாக்கள் தானம் அளிக்கப்பட்டு, சுமார் 1,500 உயிர்களை காப்பாற்றியதாகவும், வீடுகளில் தனியாக வாழும் வயது முதிர்ந்தோருக்காக ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஒரு சிறப்பு ஹெல்ப்லைன் தொலைப்பேசி எண் அளிக்கப்பட்டுள்ளது” என சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: