விளையாட்டு வியாபாரமானது... குவியும் ஆர்டர்கள்...! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ருமேனியாவில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலான புதிய வகை ஷூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விளையாட்டு வியாபாரமானது... குவியும் ஆர்டர்கள்...! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Picture: Raul Stef/Reuters
  • News18
  • Last Updated: June 10, 2020, 7:04 AM IST
  • Share this:
ருமேனியாவைச் சேர்ந்த காலணி உற்பத்தியாளர் ஒருவர் இரண்டரை அடி நீளமுள்ள இந்த புதிய வகை ஷூக்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததை கண்டு வருத்தமடைந்த அவர், நீளமான ஷூக்களை தயாரித்து அதனை இணையதளத்தில் வெளியிட்டார்.

இதன் மூலம் கவரப்படும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவே அவர் இதனைச் செய்தார். ஆனால் அவரே ஆச்சரியப்படும் விதமாக அடுத்த நாள் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது.


அதன் பிறகு கனடா, இங்கிலாந்து, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்கின. இந்திய மதிப்பில் இந்த காலணிகளின் விலை சுமார் 8,700 ரூபாயாகும்.

Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading