Home /News /coronavirus-latest-news /

நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசியை குறைக்கவில்லை - அமைச்சர் காமராஜ்

நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசியை குறைக்கவில்லை - அமைச்சர் காமராஜ்

கோப்புப் படம்

கோப்புப் படம்

"கடந்த ஏப்ரல் 28ம் தேதி கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்"

    தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரிசி குடும்ப அட்டைதரார்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

    மேலும் கடந்த ஏப்ரல் 28ம் தேதி கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனிடையே அரசி அளவு குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசாணையின் அடிப்படையில் ஒரு நபர் கார்டுக்கு 15 கிலோ, 2 நபர் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. 3 அல்லது 4 நபர்களுக்கு மேலே செல்லும்போது அரிசியின் அளவு இரட்டிப்பு ஆகிறது. எனவே என்ன தேவையோ அதனை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது என்று கூறினார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Minister Kamaraj, Ration

    அடுத்த செய்தி