குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம்: திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம்: திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..
மாஸ்க்
  • Share this:
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசங்கள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழக அரசு முடிவின்படி, மொத்தம் உள்ள 2 கோடியே 8 லட்சத்து 23076 குடும்ப அட்டைகளில், 6 கோடியே 74 லட்சத்து 15899 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில் 13 கோடியே 48 லட்சத்து 31798 மறு பயன்பாட்டு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளது.

தரமான காட்டன் துணியால் தயாரிக்கப்பட கூடிய முகக் கவசம் காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த முக கவசத்தை துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


முதல்கட்டமாக 4 கோடி முகக்கவசங்கள் தயாராக உள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள 7 கோடி முகக்கவசங்கள்  தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்க உள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading