முகப்பு /செய்தி /கொரோனா / ஊரடங்கு காரணமாக வீட்டுக்கே தேடிச் சென்று பணி ஓய்வு சான்றிதழ் வழங்கல்!

ஊரடங்கு காரணமாக வீட்டுக்கே தேடிச் சென்று பணி ஓய்வு சான்றிதழ் வழங்கல்!

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய சாந்தி, மிக எளிமையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய சாந்தி, மிக எளிமையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய சாந்தி, மிக எளிமையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஊரடங்கு காரணமாக வீட்டுகளுக்கே தேடிச் சென்று பணி ஓய்வு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 

அரசு ஊழியர்கள் பணி ஓய்வு என்பது அவர்களுக்கு மிக முக்கிய நிகழ்வாக அமையும். ஓய்வு பெறும் நாளில் பல்லாண்டு காலம் பழகிய அலுவலக சக ஊழியர்களின் உபசரிப்பு விழா என மாலை, மரியாதையுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.  சிலர் அழைப்பிதழ் கொடுத்து பெரிய விழாவாகவே நடத்துவார்கள்.

ஆனால், கொரோனா ஊரடங்கையடுத்து விழாக்களைத் தவிர்த்து அரசு கடைநிலை ஊழியர் தொடங்கி பலரும் சத்தமில்லாமல் அமைதியாக பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய 271 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், இவர்கள் பணி ஓய்வு பெற்றதற்கான சான்றிதழை அந்தந்த கிளை மேலாளர்கள் நேற்று சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

இதே போல் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய சாந்தி, மிக எளிமையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விடைபெற்றார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

First published:

Tags: Lockdown, Retirement, Trichy