சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ கொரோனா தொற்றால் உயிரிழப்பு
உயிரிழந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்.
  • Share this:
கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு மாவட்ட எல்லைகளையும் மூடியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதுவரையில் கடலூர் மாவட்டத்தில் 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 21ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.


Also see:


அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இறந்ததற்குப் பிறகு வந்தன. அதில் அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், சிதம்பரம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஊழியர்கள் உரிய பாதுகாப்புடன் அவரை அடக்கம் செய்தனர். சிதம்பரத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading