• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் 14 நாட்களாக தொற்று கண்டறியப்படாத 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு

சென்னையில் 14 நாட்களாக தொற்று கண்டறியப்படாத 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு

கோப்புப்படம்

கோப்புப்படம்

14 நாட்களாக புதிய நோய் தொற்று கண்டறியப்படாமல், அதிகப்படியான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

  • Share this:
சென்னையில் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறிப்படாத 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக  அறிவிக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளும் எதுவும் பொருந்தாது. வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் இன்றைய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதிய தொற்று வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னையில் கடந்த 14 நாட்கள் தொற்று கண்டறியப்படாத 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

திருவெற்றியூர் - 19,

மணலி- 7,

மாதவரம் - 11,

தண்டையார்ப்பேட்டை- 36,

ராயபுரம் - 72,

திரு.வி.க., நகர் - 67,

அம்பத்தூர் - 24,

அண்ணா நகர்- 23,

தேனாம்பேட்டை- 35,

கோடம்பாக்கம்- 22,

வளசரவாக்கம் -33,

ஆலந்தூர் - 4,

அடையாறு-12,

பெருங்குடி-8,

சோழிங்கநல்லூர்- 6

ஆகிய பகுதிகளில் கட்டுப்படுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

14 நாட்களாக புதிய நோய் தொற்று கண்டறியப்படாமல், அதிகப்படியான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

அதேபோல், சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம் - 162 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக திரு.வி.க., நகர் - 124, அம்பத்தூர் - 65, மாதவரம் - 63, கோடம்பாக்கம்- 51, மணலி- 46, திருவெற்றியூர் - 39, வளசரவாக்கம் -24, அடையாறு-24, சோழிங்கநல்லூர்- 23, தண்டையார்ப்பேட்டை- 21,  அண்ணா நகர்- 19 தேனாம்பேட்டை- 18, ஆலந்தூர் - 16, பெருங்குடி-19 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: