ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா பரவாமல் இருக்க புது டெக்னிக்- ஜப்பான் ரெஸ்ட்ராண்டின் அசத்தல் ஐடியா!

கொரோனா பரவாமல் இருக்க புது டெக்னிக்- ஜப்பான் ரெஸ்ட்ராண்டின் அசத்தல் ஐடியா!

ஒவ்வொரு மூங்கில் விளக்கு குவிமாடமும் 102 மீட்டர் உயரமும், 75 சென்டி மீட்டர் விட்டமும் கொண்டவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு மூங்கில் விளக்கு குவிமாடமும் 102 மீட்டர் உயரமும், 75 சென்டி மீட்டர் விட்டமும் கொண்டவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு மூங்கில் விளக்கு குவிமாடமும் 102 மீட்டர் உயரமும், 75 சென்டி மீட்டர் விட்டமும் கொண்டவையாக இருக்கின்றன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்று, கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பாரம்பரியமுறையில் குவிமாடம் அமைத்திருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஹோட்டல் தொழில் கடுமையாக முடங்கியது. சாலையோர உணவகங்களை நடத்தி வந்தவர்கள், கொரோனா நெருக்கடியால் பொருளாதார இழப்பை சந்தித்து வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். பெரும் ஹோட்டல்களும் வருவாய் இல்லாமல் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில், இப்போதைய நிலைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய டெக்னிக்குகளை புகுத்து வருகின்றனர்.

சில ரெஸ்ட்ராண்டுகள், ஹோட்டல்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அடைக்கப்பட்ட தனி மேஜைகள், தனித் தனி அறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால், ஜப்பானிய உணவகம் ஒன்று, டைனிங் டேபிள் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விதமாக பாரம்பரிய முறையில் சில நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி, ரெஸ்டாரண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது, ஜப்பானில் பாரம்பரியமாக இருந்த மூங்கில் வினைல்கள் மூலம் உருவாக்கப்படும் குவிமாடத்தில் மிகப்பெரிய விளக்கை வைத்து, பாதுகாப்பு அம்சத்தை உருவாக்கியுள்ளது.

சிறந்த ஒலி மற்றும் கைவினைப் பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த குவிமாடம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியாக இருக்கும். எதிரெதிரே இருப்பவர்களையும் நம்மால் பார்த்துக்கொண்டு வழக்கம்போல் உரையாடியவாறு சாப்பிடலாம். அதேநேரத்தில், இந்த குவிமாடம் மற்றும் லைட் போதுமான பாதுகாப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இது அந்த உணவகத்துக்கு பெரும் மதிப்பையும், விளம்பரத்தையும் தேடி தந்துள்ளது.

அந்த உணவகத்தின் பெயர் செயின் ஹோஷினோயா. டோக்கியோவில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் அப்பகுதியில் மிகவும் பிரலபமான காஸ்டிலியான ஹோட்டல் ஆகும். ஏற்கனவே மூங்கில் உள்ளிட்ட இயற்கை பொருட்களை வைத்தே அங்குள்ள இருக்கைகள் உள்ளிட்டவை முழுமையாக அமைக்கப்பட்டிருக்கும். இப்போது, ஜப்பானிய காகிதம் மற்றும் மூங்கில் விளக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பான குவிமாடமும், அந்த ஹோட்டலின் சிறப்பம்சத்தில் சேர்ந்ததுள்ளது.

Must Read | நீங்கள் விரும்பும் ’ஜங்க்’ உணவுகள் உடலுக்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்! எச்சரிக்கும் மருத்துவ உலகம்

ஒவ்வொரு மூங்கில் விளக்கு குவிமாடமும் 102 மீட்டர் உயரமும், 75 சென்டி மீட்டர் விட்டமும் கொண்டவையாக இருக்கின்றன. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள மூங்கில் விளக்கு குவிமாடங்கள் 18 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து அந்நாட்டில் பிரபலம். தற்போதைய கொரோனா காலத்தில், பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டதால் ஹோஷோனோயா உணவகம் வித்தியாசமாக யோசித்து இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

வித்தியாசமான மற்றும் பாரம்பரியத்தையும் உள்ளடக்கியதாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரெஸ்டாரண்டுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அமோக வரவேற்பையும் கொடுக்க ஹோஷினோயா உணவகம் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன், உணவுப் பட்டியலிலும் பாரம்பரிய உணவுகளே இருக்கின்றன. பிரெஞ்சு உணவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஒரு நபர் அந்த உணவகத்துக்கு சென்று வந்தால் சராசரியாக 21,780 யென் செலவிட வேண்டியிருக்கும்.

First published:

Tags: Covid-19, Japan, Restaurant