வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை

”மருத்துவ பரிசோதனை முகாம்களில் இரு வாரங்கள் தங்க வைத்து உரிய பரிசோதனை கிசிச்சைகளுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கலாம்”

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை
மு. தமிமுன் அன்சாரி, எம்எல்ஏ.
  • Share this:
வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“சுற்றுலா மற்றும் வணிக நிமித்தமாக குறுகிய கால பயணமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். பலர் போதிய பணமில்லாததால் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் அவதிப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடத்திற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.


அமீரகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கத்தார், வங்காளதேசம், மொரீஷியஸ் போன்ற பல நாடுகளில் இத்தகைய நிலையில் தவிப்பவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அவ்வாறு வருபவர்களை இங்கு மருத்துவ பரிசோதனை முகாம்களில் இரு வாரங்கள் தங்க வைத்து உரிய பரிசோதனை கிசிச்சைகளுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கலாம். இக்கோரிக்கையை தமிழக அரசும், மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading