மத்திய அரசின் அறிவுறுத்தலால் ரெம்டெசிவிர் மருந்தின் விலை பெருமளவு குறைப்பு

ரெம்டெசிவர் - கொரோனா மருந்து

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ரெம்டெசிவிர் ஊசி மருந்தின் விலையை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவு குறைத்துள்ளன. காடிலா ஹெல்த்கேர் நிறுவனம் 2800 ரூபாயிலிருந்து, 899 ரூபாயாக குறைத்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் வகையில், ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

  மேலும், ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்கவும், விலையை குறைக்கவும் அறிவுறுத்தியது. இதன்படி, ரெம்டெசிவிர் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, காடிலா ஹெல்த்கேர் நிறுவனம் ரெம்டெசிவிர் ஊசி மருந்தின் விலையை 2800 ரூபாயிலிருந்து, 899 ரூபாயாக குறைத்துள்ளது.

  மேலும் படிக்க... தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - நடிகர் விவேக்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: