குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு நிவாரண நிதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். எனவே தமிழக அரசும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவியையும், அத்தியாவசிய பொருள்களையிம் வழங்கி வருகிறது.


இந்தநிலையில் மூன்றாம் பாலினத்தவரின் நலனைக் கருத்தி, கொண்டு தமிழக அரசு, குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கு தலா 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் குடும்ப அட்டை இல்லாத 4,022 மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறுவர் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதை பழனிசாமி அரசு உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading