Home /News /coronavirus-latest-news /

தாய்நாட்டின் நலனை காக்கும், கொரோனா பாதுகாவலர்கள் ஒவ்வொருவரையும் போற்றும் ரிலையன்ஸ்!

தாய்நாட்டின் நலனை காக்கும், கொரோனா பாதுகாவலர்கள் ஒவ்வொருவரையும் போற்றும் ரிலையன்ஸ்!

கொரோனாவிலிருந்து இந்தியாவை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்நாட்டின் நலனை காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் போற்றுகிறது ரிலையன்ஸ் குழுமம்.

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்றோர், விளிம்புநிலையில் உள்ள மக்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவும் வண்ணம் ரிலையன்ஸ் அறக்கட்டளை சுமார் 3 கோடி பேருக்கு உணவளிக்கும் திட்டத்தை அண்மையில் முன்னெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது, அறக்கட்டளை மூலம் ஏராளமான உதவிகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது ரிலையன்ஸ்.

மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து ரிலையன்ஸ் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியுள்ளது.

மேலும் சுகாதார பணியாளர்களுக்காக ரிலையன்ஸ் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கு மேலான முகக்கவசங்களைத் தயாரித்து வருகிறது. அவசரதேவைகளுக்கு வாகனங்களுக்கு இலவச எரிபொருளையும் ரிலையன்ஸ் வழங்குகிறது.

இந்த வீடியோவின் இறுதியில் பேசியுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீட்டா அம்பானி, கொரோனா போரில் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Yuvaraj V
First published:

Tags: Corona Warriors

அடுத்த செய்தி