முகப்பு /செய்தி /கொரோனா / RIL | 13 லட்சம் ஊழியர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி- ரிலையன்ஸ் அறிவிப்பு

RIL | 13 லட்சம் ஊழியர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி- ரிலையன்ஸ் அறிவிப்பு

2035ம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கார்பன் மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை கொண்டு ரிலையன்ஸ் பயணித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

2035ம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கார்பன் மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை கொண்டு ரிலையன்ஸ் பயணித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

நாட்டில் உள்ள எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் காணாத பெரிய தடுப்பூசித் திட்டம் ஒன்றை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விரிவான திட்டம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதாவது 13 லட்சத்திற்கும் கூடுதலான ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், நிறுவனக் கூட்டாளிகள் (அதாவது Google, BP போன்றவை), இவர்களது குடும்பத்தினர் அதாவது நாடு முழுதும் 880 நகரங்களில் உள்ள இவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது, இதற்கான விரிவான திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

குடும்பத்தினர் என்றால் தாய், தந்தை, சகோதர சகோதரிகள் மட்டுமல்லாது மாமனார், மாமியார், மருமகன், மருமகள்கள், தாத்தா, பாட்டி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசிப் போடப்படும் மெகா திட்டமாகும் இது.

இந்த தடுப்பூசித் திட்டம் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமானது அல்ல, ரிலையன்ஸிலிருந்து ஓய்வ் பெற்ற ஊழியர்கள் அவர்களது குடும்பம், அவர்களது விரிவான குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கு ஊழியர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் Cowin இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு RIL ஆன்லைன் ஹெல்த் கேர் தளமான Jio Healthhub-ல் தங்களது இடத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்தத் தடுப்பூசித் திட்டம் மத்திய அரசின் பணியிட தடுப்பூசி திட்டக் கொள்கையின் ஓர் அங்கமாகும். இது RIL-ன் ஆக்குபேஷனல் ஹெல்த் செண்டர்களில் செலுத்தப்படும். அதாவது ஜாம்நகர், வதோதரா, ஹாசிரா, தாகேஜ், படல்கங்கா, நகோதானே, கானிகடா, கதிமோகா, சாஹ்தால், பராபங்கி, ஹோஸ்பியார்பூர், ரிலையன்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 800க்கும் அதிகமான நகரங்களில் உள்ள கூட்டாளி மருத்துவமனைகள், அதாவது அப்போல்லோ, மாக்ஸ், போன்ற மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடப்படும்.

சில பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் ஏற்கெனவே இந்தத் தடுப்பூசி திட்டத்தினால் பயனடைந்துள்ளனர். இதற்காக இவர்கள் மேற்கொண்ட செலவுகளை நிறுவனம் இவர்களுக்கு திருப்பி அளிக்கும். 3.30 லட்சம் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் இதுவரை வாக்சின் போட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக செலவு செய்திருந்தால் அந்தத் தொகை திருப்பி அளிக்கப்படும்.

ஜூன் 15ம் தேதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனம் தனது அனைத்து ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசியைப் போட திட்டமிட்டுள்ளது. ஆர்.ஐ.எல். மற்றும் அதன் குழுவைச் சேர்ந்த நிறுவனங்கள், ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் 13,000 சில்லரை விற்பனை நிலைய ஊழியர்கள் ஆகியோரும் இந்த தடுப்பூசித் திட்டத்தினால் பயனடையவுள்ளனர்.

இதற்காக கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. மும்பையில் உற்பத்தித் தொழிற்கூடங்களில் ரிலையன்ஸ் மெகா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. அடுத்த வாரத்தில் பிற பெரு நகரங்களிலும் மாநில தலைநகரங்களிலும் திட்டம் தொடங்கப்படும். இதற்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் பார்டனர்கள், ஊழியர்கள் இருக்கும் பிற நகரங்களில் பார்ட்னர் மருத்துவமனைகளின் உதவியுடன் தடுப்பூசி போடப்படும்.

RIL நிறுவனத்தின் அதிவிரைவு மற்றும் அதிக செலவு பிடிக்கும் இந்த மெகா வாக்சின் திட்டத்தின் மூலம் தன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாப்பு எய்தச் செய்வதோடு நாட்டின் பொதுச்சுகாதார அமைப்புக்கு உள்ள அழுத்தங்களையும் குறைக்கிறது. இதன் மூலம் இந்தியா எதிர்கொண்டு வரும் மாபெரும் கொரோனா பரவல் பிரச்னையை நம் நாடு இன்னும் திறம்பட எதிர்கொள்ள வழிவகை செய்கிறது.

First published:

Tags: Covid-19 vaccine, Reliance, Reliance Foundation, Reliance Jio