கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 700 டன் ஆக்ஸிஜன் இலவசமாக சப்ளை செய்யும் ரிலையன்ஸ்

கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 700 டன் ஆக்ஸிஜன் இலவசமாக சப்ளை செய்யும் ரிலையன்ஸ்

கொரோனா

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததையடுத்து ரிலையன்ஸ் நிர்வாகம் தேவையான உபகரணங்களை நிறுவி மெடிக்கல் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறது.

  • Share this:
    ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது சுத்திகரிப்பு ஆலையில் இருந்து மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை  நாளொன்றுக்கு 700 டன்னாக அதிகரித்துள்ளது.

    குஜராத்தின், ஜாம்நகரில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் இருந்து முதற்கட்டமாக 100 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கி வந்தது.  இதனை 700 டன்னாக அதிகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 70000 நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக இந்த 700 டன் ஆக்ஸிசன் உற்பத்தியை 1000 டன்களாக  உயர்த்த  முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    'ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் மெடிக்கல் ஆக்ஸிஜன் என்பது ஒரு உற்பத்தி பொருள் அல்ல. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததையடுத்து ரிலையன்ஸ் நிர்வாகம் தேவையான உபகரணங்களை நிறுவி மெடிக்கல் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.

    நாளொன்று 700 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து நாடு முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவை உள்ளவர்களுக்கு விநியோகிக்கப்படும். ஆக்ஸிஜன் இதனை கொண்டு செல்லும் வாகனப் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக மாநிலங்களுக்கு ரிலையன்ஸ் வழங்குவதாக தெரிகிறது.

    மேலுல் ரிலையன்ஸ் பவுண்டேஷன் நாட்டின் முதல் கோவிட் மருத்துவமனையை மும்பையில் பிஎம்சி(Brihanmumbai Municipal Corporation) மாநகராட்சியுடன் அமைத்துள்ளது. 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை இரண்டு வாரங்களில் அமைக்கப்பட்டது. இது விரைவில் 250 படுக்கைகள் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மும்பையில் உள்ள தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டை ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைத்துக்கொடுத்துள்ளது.

    மாதிரிப்படம்


    அதுமட்டுமின்றி ரிலையன்ஸ் ஒரு நாளைக்கு 1,00,000 பிபிஇ மற்றும் மாஸ்க்-களை முன்களப்பணியாளர்களுக்காக உற்பத்தி செய்கிறது. கடந்த ஆண்டு ஊரடங்கு போது ரிலையன்ஸ் 18 மாநிலங்களில் 249 மாவட்டங்களில் இயங்கிய 14000 ஆம்புலன்களுக்கு இலவசமாக 5.5 லட்சம் லிட்டர் எரிபொருளை வழங்கியுள்ளது.

    கடந்தாண்டு ஊரடங்கின் போது ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் மிஷன் அன்ன சேவா தொடங்கப்பட்டது. இது மிகப்பெரிய உணவு விநியோக திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 18 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்தில் 5.5 கோடி உணவு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா சமயத்தில் பிரதமர் நிவாரண நிதி உட்பட பல்வேறு நிவாரணங்களுக்காக 565 கோடி வழங்கியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published: