Reliance | ரிலையன்ஸ் பவுண்டேஷன் மும்பையில் முன்னெடுத்துள்ள கோவிட் பணிகள்

மாதிரிப்படம்

தேசத்திற்கு சேவை செய்வதில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் எப்போதும் முன்நிற்கும் என நீடா அம்பானி கூறியுள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நீடா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவுண்டேஷன் மும்பை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    ரிலையன்ஸ் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சர் எச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனை 650 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தேசிய விளையாட்டு மையத்தில் அமைத்துள்ளது. இதில் 100 புதிய ஐசியூ படுக்கை வசதிகள் ரிலையன்ஸ் பவுண்டேஷனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ட்ரிடெண்ட் ஹோட்டலில் அறிகுறியற்ற நோயாளிகளுக்காக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் 125 படுக்கைகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது . இதில் 45 ஐசியூ படுக்கைகளும் அடங்கும்.

    தேசிய விளையாட்டு மையத்திலும், செவன் ஹில்ஸ் மருத்துவமனையிலும் உள்ள 775 படுக்கைகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். ரிலையன்ஸ் பவுண்டேஷன், சார்பில் 500 முன்களப்பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் நியமிக்கப்பட்டனர். மருத்துவச் செலவு அனைத்தையும் ரிலையன்ஸ் பவுண்டேஷனே ஏற்கும். கடந்தாண்டு ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் மும்பை மாநகராட்சி இணைந்து நாட்டின் முதல் கோவிட் தடுப்பு மருத்துவமனையை ஏற்படுத்தியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிறுவன தலைவர் நீடா அம்பானி , தேசத்திற்கு சேவை செய்வதில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் எப்போதும் முன்நிற்கும். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் இடைவிடாத போராட்டத்தில் உறுதுணையாக இருப்பது நமது கடமை. எங்களது மருத்துவர்களும், முன்களப்பணியாளர்களும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்காக இடைவிடாது பணியாற்றுகின்றனர். சிறந்த மருத்துவ சேவையை அளிக்கின்றனர். சர் எச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனை மும்பை முழுவதும் 875 படுக்கைகளை நிர்வாகித்து வருகிறது.

    அதுமட்டுமின்றி நாங்கள் ஒருநாளைக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை குஜராத், மகாராஷ்ட்ரா, டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இது மேலும் விரிவுபடுத்தப்படும்” என்றார். கடந்தாண்டு ரிலையன்ஸ் பவுண்டேஷன்  ‘அன்ன சேவா’ திட்டத்தின் மூலம் 5.5 கோடி உணவுகளை வழங்கியது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: