ஹோம் /நியூஸ் /கொரோனா /

ரூ.20 லட்சம் பில் போட்ட தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

ரூ.20 லட்சம் பில் போட்ட தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

ரூ.20 லட்சம் பில் போட்ட தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழந்த பிறகு சிகிச்சை கட்டணமாக 20 லட்ச ரூபாய் கேட்டதால், மருத்துவமனையை உறவினர்கள் அடித்து உடைத்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஹைதராபாத் பஞ்சாகுட்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வம்சி என்பவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் 16 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றுவந்த வம்சி, சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். ஏற்கனவே சிகிச்சை கட்டணமாக நான்கு லட்ச ரூபாயை வம்சியின் குடும்பத்தினர் செலுத்தியிருந்தனர். இன்னும் 20 லட்ச ரூபாய் செலுத்திவிட்டு உடலை பெற்றுச் செல்லுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கறாராக கூறியுள்ளது.

  வேறு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவரும் உயிரிழந்த வம்சியின் சகோதரி உட்பட உறவினர்கள் மருத்துவமனை முன் குவிந்து மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆவேசப்பட்ட வம்சி உறவினர்கள் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மற்றும் பர்னிச்சர்களை அடித்து உடைத்தனர்.

  அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த தனது சகோதரனை உடன் இருந்து தான் கவனித்துக்கொண்டதாகவும், அவருக்கு தேவையின்றி 6 ஸ்டிராய்டு ஊசிகள் போடப்பட்டதாகவும் வம்சியின் சகோதரி குற்றம்சாட்டியுள்ளார். சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளால் தனது சகோதரரின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால்தான் அவர் மரணம் அடைந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

  ஏற்கனவே நான்கு லட்ச ரூபாய் செலுத்தி இருந்த நிலையில் இன்னும் இருபது லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அழுத்தம் கொடுத்ததால், தான் இறந்தவரின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர். பின்னர் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை வம்சி உடலை பெற்று செல்லுமாறு தெரிவித்ததன் அடிப்படையில், வம்சி உடலை குடும்பத்தார் பெற்று சென்றனர்.

  மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் பஞ்சகுட்டா போலீசார் வன்முறைகளில் ஈடுபட்ட வம்சியின் உறவினர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், அதிக கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  மேலும் படிக்க... ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் பில்; கொரோனா சிகிச்சையில் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை!

  மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Corona death, Crime | குற்றச் செய்திகள், Hyderabad