அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை - மத்திய அரசு
தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாதிரி படம்
- News18 Tamil
- Last Updated: December 31, 2020, 11:04 PM IST
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பூசிக்கு அனைவரையும் தயாராக இருக்கும்படியும், அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்றும் 83 கோடி தடுப்பூசிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Also read: 100 நாட்கள் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல முடியாத சில மாநிலங்களின் உட்பகுதிகளில், 3 கட்டங்களாக இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படும் எனவும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னோட்டமாக கடந்த 28 மற்றும் 29ம் தேதிகளில், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்றும் 83 கோடி தடுப்பூசிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Also read: 100 நாட்கள் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்