பிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிவப்பு வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

பிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிவப்பு வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
  • Share this:
பிரேசில் நாட்டின் தலைநகர் பிரெசிலியாவில் நடைபெற்ற இந்நிகழ்விற்காக ஒன்று கூடிய கலைஞர்கள் அனைவரும் வெள்ளை உடை அணிந்திருந்தனர். கைகளில் இதய வடிவிலான சிவப்பு வண்ண பலூன்களை ஏந்திய அவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் பலூன்களை பறக்கவிட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் இதுவரை 31,309 பேர் உயிரிழந்துள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கையை விட அதிகம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக பலூன்கள் பறக்கவிடும் நிகழ்ச்சியை நடத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.Also see:
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading