corona numbers today | ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,780 பேர் மரணம்: 3.82 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு

corona numbers today | ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,780 பேர் மரணம்: 3.82 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக 3,780 பேர் மரணமடைந்துள்ளனர்.

  • Share this:
    இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆகும். சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3,780 ஆக அதிகரிக்க, மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவிலிருந்து புதிதாக 3,38,439 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே, 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 ஆக உள்ளது.

    இதுவரை நாட்டில் 16 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா வாக்சின், அதாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதில் வழக்கம் போல் அதிக மரணங்கள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது, இங்கு 891 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 351 பேர் பலியாகினர்.

    அதே போல் கொரோனா வைரஸ் பரவலில் தினசரி அதிகம் பாதித்த மாநிலங்களிலும் மகாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது இங்கு 24 மணி நேரத்தில் 51,880 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. கர்நாடகாவில் 44,361 பேருக்கும், கேரளாவில் 37,190 பேருக்கும், உ.பி.யில் 25,770 பேருக்கும் தமிழ்நாட்டில் 21,288 பேருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.

    இந்தியாவில் புதிதாகக் கொரோனா தொற்றியுள்ள விகிதத்தில் 47.26% கேஸ்கள் இந்த 5 மாநிலங்களில்தான் பதிவாகியுள்ளது. புதிய கேஸ்களில் மகாராஷ்டிரா மட்டும் தினசரி 13.57% பங்களிப்பு செய்கிறது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதவாக்கில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது. தினசரி கொரோனா ஏப்ரல் 15ம் தேதி 2 லட்சத்தைக் கடந்தது. ஏப்ரல் 22ம் தேதி வாக்கில் 3 லட்சத்தைக் கடந்தது. மே 1ம் தேதி 4 லட்சத்தைக் கடந்தது.’ என்று கூறப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published: