கொரோனா தடுப்பூசி கையில் மட்டுமே செலுத்தப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?

கொரோனா தொற்றின் தீவிரம் உணர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயாராக உள்ளனர்.

கொரோனா தொற்றின் தீவிரம் உணர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயாராக உள்ளனர்.

  • Share this:
இந்திய மக்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவற்றுடன் சேர்த்து தடுப்பூசி இயக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நீடித்து வருகிறது. தொற்றின் தீவிரம் உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் தயாராக உள்ளனர். எனினும் பல்வேறு இடங்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி கிடைக்காத நிலையே உள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசிகள் கையின் மேல்புற தசையில் (upper arm) போடப்பட்டு வருகின்றன. அது ஏன் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பதில் இதோ!

கொரோனா தடுப்பூசி ஏன் கையில் மட்டுமே போடப்படுகிறது?

ஆன்டிஜெனை (antigen) அங்கீகரிக்கும் முக்கியமான நோய் எதிர்ப்பு செல்கள் தசை திசுக்களில் (muscle tissue) இருப்பதால் பெரும்பாலான தடுப்பூசிகள் தசைகளில் செலுத்தப்படுகின்றன. ஆன்டிஜென் என்பது ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியாவின் ஒரு சிறிய துண்டு ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். இருப்பினும்,
கோவிட் -19 தடுப்பூசியானது ஆன்டிஜெனை அறிமுகப்படுத்தவில்லை. மாறாக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஆன்டிஜென்களை உற்பத்தி செய்வதற்கான ப்ளூ பிரிண்ட்டை நிர்வகிக்கிறது. தசை திசுக்களில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் இந்த ஆன்டிஜென்களை எடுத்து, அவற்றை லிம்ப் நோட்ஸ் (lymph nodes) எனப்படும் நிணநீர் முனைகளுக்கு வழங்குகின்றன.

நிணநீர் என்பது உடலின் உயிரணுக்களுக்கு இடையே உருவாகின்ற ஒரு திரவம். இந்த நீர்த்த திரவமானது பல்வேறு நிணநீர்ச் சுரப்பிகளின் ஊடாக நிணநீர் செல்வழிகளில் பயணித்து கடைசியில் ரத்த ஓட்டத்திற்குள் வடிகிறது. நிணநீர் மற்றும் நிணநீர்ச் சுரப்பிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பகுதிகள் ஆகும். கோவிட் தடுப்பூசியை தசை திசுக்களில் செலுத்துவது அதனை எல்லைக்குட்படுத்துகிறது. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் மற்ற நோய் எதிர்ப்பு உயிரணுக்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து வேலை செய்ய வைக்கிறது. தவிர, கொரோனா ஊசி செலுத்துமிடத்தில் சிலருக்கு அசைக்க முடியாத வலி மற்றும் சிறிய அளவிலான காயம் ஏற்படும் என்பதால் மற்ற பகுதிகளை விட கைகளில் போட்டு கொள்வது சற்று வசதியாக இருக்கும்.

கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?

தடுப்பூசி கையின் மேல்புற தசையில் செலுத்தப்பட்டவுடன், இதன்மூலம் உருவாகும் ஆன்டிஜென்களானது நோய் எதிர்ப்பு உயிரணுக்களால் அருகிலுள்ள lymph node-களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய கூறுகளாக lymph node-கள் இருப்பதால் இவை அதிக நோய் எதிர்ப்பு உயிரணுக்களை கொண்டிருக்கின்றன. எனவே தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்டவுடன் ஆன்டிபாடிகளை உருவாக்கும் நோய் எதிர்ப்பு செயல்முறையை தொடங்குகின்றன. இந்த சிறப்பு செல்கள் டி செல்கள் மற்றும் பி செல்கள் என அழைக்கப்படும். இவை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட செல்கள் அல்லது ஆன்டிபாடி செக்ரீட்டிங் செல்களை (Antibody secreting cells ) தேடி அழிக்கின்றன.
Published by:Archana R
First published: