Home » News » Coronavirus-latest-news » READY POSITION IN COVISHIELD VACCINE SAYS SERUM INSTITUTE SUR

தயார் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி - சீரம் நிறுவனம் தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசி வரும் வாரங்களில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றது

தயார் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி - சீரம் நிறுவனம் தகவல்
கோவிஷீல்டு
  • Share this:
கோவிஷீல்டு தடுப்பூசியை வெளியிட தயார் என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.

சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை, இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீரம் றிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தமது ட்விட்டரில் பதிவில், “அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பு வைக்க எல்லா இடர்களையும் இந்திய சீரம் நிறுவனம் எடுத்துக்கொண்டது.


இறுதியில், அதற்கான விலை கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது, செயல்திறன் கொண்டது. வரும் வாரங்களில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

அவரின் மற்றொரு பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தனுக்கும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், இதற்காக பங்காற்றிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி”  என பூனவாலா  தெரிவித்துள்ளார்.
First published: January 4, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading