• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • RBI Governor Press Conference: EMI செலுத்த கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்

RBI Governor Press Conference: EMI செலுத்த கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கி ஆளுநர்

Shaktikanta Das Press Conference: ரெப்போ விகிதம் குறைப்பால், வங்கி கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனாவால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ₹ 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.

    பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு அடுத்து முதன் முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

    இதற்கு முன்னர் 2 முறை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று அவர் கூறுகையில், கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுரெப்போ விகிதம் மேலும் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுகிறது. 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கி கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

    உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும். வங்கிக்கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் வழங்க வங்கிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    LIVE:









    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: