சென்னையில் மீண்டும் பொது முடக்கம்: முதல்வருக்கு எம்.பி ரவிக்குமார் முன்வைக்கும் கோரிக்கைகள்

ரவிக்குமார், எம்.பி.

சென்னையில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளிவந்துள்ளதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த திருவள்ளூர் எம்.பி ரவிக்குமார் ட்விட்டர் பதிவில், "இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது முடக்கத்தை 19ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது முடக்க அறிவிப்பு மட்டும் போதாது. நான் முன்னர் குறிப்பிட்டிருந்த பின்வரும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

  1. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

  2. சென்னை மாநகரின் அங்கமாக இருக்கின்ற திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த பகுதிகளிலும் இதே நடைமுறையைக் கையாள வேண்டும்.

  3. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் அனைத்து தனியார் பள்ளிகள், கல்லூரிகள் யாவற்றையும் அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவற்றில் குறைந்தபட்சம் 1 லட்சம் படுக்கைகளைத் தயார்படுத்த வேண்டும்.

  4. அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் நோய்த்தொற்று உச்சமடையும் என மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதால் குறைந்தபட்சம் டிசம்பர் மாதம் வரை இந்தத் தயார்நிலை பராமரிக்கப்பட வேண்டும்

  5. நோய்த்தொற்று எண்ணிக்கை 100க்கு கீழே குறையாத வரை முழு முடக்கத்தை விலக்கக் கூடாது.

  6. படுக்கை வசதிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைத் தற்காலிகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

  7. விரைவுப் பரிசோதனைக் கருவிகளை (Rapid Test Kits) தருவித்து இதர மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் மூலமாகப் பரிசோதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Rizwan
  First published: