’கொரோனாவுக்கு மருந்து’ - பதஞ்சலிக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு

கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்த நிலையில், அதனை விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

’கொரோனாவுக்கு மருந்து’ - பதஞ்சலிக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 24, 2020, 6:49 AM IST
  • Share this:
கொரோனா பாதிப்பிலிருந்து 100% குணமடைய வைக்கும் "கொரோனில்" மற்றும் "சுவாசரி" என்ற ஆயுர்வேத மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதுவரை 1000 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3-7 நாட்களில் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமடையலாம் என அந்நிறுவனத் தலைவர் பாபா ராம் தேவ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டிளித்திருந்தார்.

இது தொடர்பாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மருந்துகள் தொடர்பாக எந்தவொரு அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளும் தங்களுத் தெரியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





படிக்கசிக்கிமில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வைரலாக பரவும் வீடியோ

படிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்






கொரோனில் மருந்தின் மாதிரி, எந்த இடத்தில் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது?, நிறுவன நெறிமுறைக் குழுவின் அனுமதி உள்ளிட்ட விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், முழுமையாக சோதனை நடத்தும் வரை, கொரோனில் மருந்துகளை விளம்பரப்படுத்தக் கூடாது எனவும், உத்தராகண்ட் மாநில உரிம ஆணையமானது பதஞ்சலி மருந்துகளுக்கு வழங்கிய அனுமதி தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கவும் ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading