• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தெரு வணிகர்களுக்கு ரூ.10,000 கடன்: உடனே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் - ராமதாஸ்

தெரு வணிகர்களுக்கு ரூ.10,000 கடன்: உடனே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் - ராமதாஸ்

தெரு வணிகர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் கடன் வழங்கும் திட்டத்தை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இழுத்தடிக்காமல் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    தெரு வணிகர்களுக்கு சிறு கடன் வழங்குவது குறித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில், ‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் சூழலில் தெரு வணிகர்கள் 50 லட்சம் பேருக்கு தலா ரூ.10,000 வீதம் கடன் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. நடைமுறைக்கு ஒத்துவராத விதிகளை காட்டி இழுத்தடிக்காமல் தேவையானவர்களுக்கு எளிதாக இக்கடன் கிடைக்க வகை செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இன்னொரு பதிவில், "சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநகரப்பகுதிகளில் மட்டும் தினமும் 10,000 சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பது தான் வல்லுனர்களின் பரிந்துரை ஆகும். சென்னையில் சோதனைகளின் எண்ணிக்கையை அந்த அளவுக்கு அதிகரித்து மக்களைக் காக்க வேண்டும்" என்றார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: