அயோத்தி ’ராம ஜென்ம பூமி’ பூசாரிக்கு கொரோனா உறுதி

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பிரதீப் தாஸ் (வட்டமிடப்பட்டவர்)

ராம ஜென்ம பூமியில் வரும் ஆகஸ்ட் 5-ல் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ள நிலையில், பூசாரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

  பிரதமரின் அயோத்தி வருகையை ஒட்டி நகரை தூய்மைப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சாலையோர சுவர்களில் வண்ணம் தீட்டப்பட்டு, மின்விளக்குகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 300 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  இந்த நிலையில், கோவில் கட்டப்பட உள்ள இடமான ராம ஜென்ம பூமியின் பூசாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரதீப் தாஸ் என்பவர், ராம ஜென்ம பூமியில் தினமும் பூஜைகள் மேற்கொள்ளும் நான்கு பேரில் ஒருவராவார்.
  படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?

  படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்


  படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
  இவருடன் சேர்த்து 16 பாதுகாப்பு அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அடிக்கல் நாட்டும் விழாவில் மிக முக்கியமான வி.ஐ.பி.க்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
  Published by:Sankar
  First published: