அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்திய பேரணியால் 30,000 பேருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்திய பேரணியால் 30,000 பேருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதிபர் ட்ரம்ப் நடத்திய பேரணியால் 30,000 பேருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

  • Share this:
    அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய பேரணிகளால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பெரிய கூட்டங்களால் ஏற்படும் கொரோனா விளைவுகள் குறித்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடந்த ஜூன் 20 முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை அதிபர் ட்ரம்ப் நடத்திய பேரணிகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் ஆராயப்பட்டன.



    இதன்படி ட்ரம்ப் நடத்திய பேரணிகளால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என எச்சரித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், 700 பேர் வரை உயிரிழக்க நேரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை பற்றிக்கூட கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
    Published by:Rizwan
    First published: