கொரோனாவால் களையிழந்த ரக்‌ஷா பந்தன்

இந்த வருடம் கொரோனாவால் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் வெகு விமர்சியாக கொண்டாடப்படவில்லை என்றாலும் அவரவர் தங்களது வீட்டுக்குள்ளேயே சமூக இடைவெளியோடு கொண்டாடினார்.

கொரோனாவால் களையிழந்த ரக்‌ஷா பந்தன்
கொரோனாவால் களையிழந்த ரக்‌ஷா பந்தன்
  • Share this:
கொரோனாவால் களையிழந்த ரக்‌ஷா பந்தன்ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்து உடன்பிறந்த தங்கை, அக்கா, அண்ணன், தம்பி என்றில்லாமல்  தனக்குப் பிடித்த நபர்களைக்கூட உடன் பிறந்தவர்களாக எண்ணி ராக்கி என்னும் வண்ணக் கயிறைக் கட்டி பரிசளித்து மகிழும் நாள்தான் ரக்‌ஷா பந்தன்.

இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கமும் நமக்கு உண்டு. இந்த நாளில், ஓர் ஆ‌ண் இ‌ந்த ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதியளிப்பது போன்றது.

வட இந்தியாவைத் தாண்டி தென் இந்தியாவிலும் இந்த நாள் தற்போது பிரபலமாகி சகோதர உறவுகளைப் பெருமைப்படுத்தி வருகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த விழா சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி, தி.நகர் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.


இந்த நாள் கொண்டாடப்பப்படுவதன் அடிப்படையே கண்ணன் பாஞ்சாலியின் மீது வைத்திருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது. ஒருமுறை போரில் காயம்பட்டு வந்தபோது, துடித்த பாஞ்சாலி சட்டென்று தனது புடைவைத் தலைப்பைக் கிழித்து கட்டுக் காட்டினாள். இந்தச் செயலைக் கண்டு நெகிழ்ந்து போன கண்ணன், பாஞ்சாலியின் அன்பை எண்ணிக் கலங்கினார்.

அதனால் எப்போதுமே தான் பாஞ்சாலியின் நல்வாழ்வைக் காக்க துணை இருப்பேன் என்று உறுதி கூறினார். அதனால்தான் சூதாட்டத்தின்போதுகூட பாண்டவர்களைக் காப்பாற்ற வராத கண்ணன், பாஞ்சாலியைத் துகிலுரிய முயன்றபோது காப்பாற்றினார். பாஞ்சாலி கண்ணனின் காயத்தைக் குணமாக்க புடைவையைக் கிழித்துக் கட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது இன்றுதான் என்பதால் அது ரக்‌ஷா பந்தன் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பல வ‌ண்ணத்தில் ரா‌க்‌கி கயிறுகளு‌ம், இ‌னி‌ப்புகளு‌ம், பரிசுகளும் இந்த நாளில் பெருமளவு விற்பனையாவதுண்டு. கூடப்பிறந்த சகோதர சகோதரிகளுக்காக விசேஷ பிரார்த்தனைகளும், பரிசளிப்பும், பலமான விருந்துகளும் இந்த நாளில் நடைபெறுவது வழக்கம்.‌ ஆனால் இந்த வருடம் கொரோனா நோய் பரவல் அதிகமாக இருக்கும் காரணத்தால் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் கலையிழந்து காணப்படுகிறது.மேலும் படிக்க...ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம்

மேலும் மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் தேவை என்பதால் உடன்பிறந்தவர்கள் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் வெகு விமர்சியாக கொண்டாடப் படவில்லை என்றாலும் அவரவர் தங்களது வீட்டுக்குள்ளேயே சமூக இடைவெளியோடு  கொண்டாட்டங்களை செய்துகொண்டனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading