• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும் - ராஜ்நாத் சிங்

கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும் - ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

கொரோனா சிகிச்சை பணியில் இந்திய ராணுவம் உதவ வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    கொரோனா சிகிச்சை பணியில் இந்திய ராணுவம் உதவ வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாட்டுகளை அமல் படுத்தியுள்ளன.

    இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், கொரோனா சிகிச்சை பணியில் மாநில அரசுகளுக்கு ராணுவம் உதவ வேண்டும். மேலும் ராணுவம், டி.ஆர்.டி.ஓ. ஆகிய அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சைக்காக உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும்.

    ராணுவ கமாண்டர்கள், மாநில முதல்வர்களை சந்தித்து, தேவையான உதவிகளை அளிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    இந்நிலையில் பிரமதர் நரேந்திர மோடி, “இந்தியா மீண்டும் கொரேனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    தற்போதைய கொரோனா பாதிப்பிலிருந்தும் நாம் மீண்டு வருவோம். இந்த நேரத்தில் நாம் பொறுமை மற்றும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

    Must Read : புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு

     

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் குறைந்த காலத்தில் விலை குறைந்த தடுப்பூசியை தயாரித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: