ரஜினிகாந்த், அமிதாப் நடிக்கும் கொரோனா வைரஸ் குறும்படம்

ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்

 • Share this:
  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

  எனவே மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  இந்தியாவில் 4067 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 291 பேர் குணமடைந்துள்ளனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முன் வந்துள்ளனர்.

  கொரோனாவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டு, தான் சார்ந்தவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், சமூக விலகல், உடல்நலம், தூய்மையாக இருப்பது உள்ளிட்ட பல விஷயங்களை பேசும் குறும்படமாக இது அமையும். ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியிருக்கும் இக்குறும்படம் இன்று இரவு 9 மணிக்கு சோனி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

  மேலும் படிக்க: விளக்கேற்றச் சொன்ன பிரதமர்... சிகரெட்டை பற்றவைத்த பிரபல இயக்குநர்..!
  Published by:Sheik Hanifah
  First published: