ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு...! ரஜினிகாந்த் அட்வைஸ்

கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது என்று ரஜினி கூறியுள்ளார்.

ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு...! ரஜினிகாந்த் அட்வைஸ்
ரஜினிகாந்த்
  • Share this:
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துஅவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தைஅணியாமலும் இருக்காதீர்கள் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கொரோனா குறித்து ரஜினியின் அறிக்கை


மேலும் படிக்க...

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் - பொதுத்தேர்வு ரத்து அறிவிப்புக்கு விஜயகாந்த் விமர்சனம்

First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading