Home /News /coronavirus-latest-news /

பணிக்கு வர முடியாத ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தமா?

பணிக்கு வர முடியாத ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தமா?

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் பணிக்கு எப்படி வர இயலும் என ரயில்வே ஊழியர்கள் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

ரயில்வே பயணிகள் 33 சதவீதம் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

அதன்படி, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விடுமுறை, சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்களுக்கு விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மீதமுள்ள ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் 33% நபர்கள் பணியில் ஒரு வாரம் பணியாற்றினால் அடுத்தவாரம் மற்றொரு 33% நபர்கள் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இல்லை என்ற காரணத்திற்காக பணிக்கு வராமல் இருக்கக் கூடாது எனவும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கிவுள்ளனர். ஆனால், போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் பணிக்கு எப்படி வர இயலும் என ரயில்வே ஊழியர்கள் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் உள்ளனர்.

இதனால் பணிக்கு வர முடியாதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Lockdown, Southern railway

அடுத்த செய்தி