ஹோம் /நியூஸ் /கொரோனா /

மாநில அரசுகள் ஒத்துழைத்தால் 300 ரயில்களை இயக்கத் தயார்: பியூஷ் கோயல்

மாநில அரசுகள் ஒத்துழைத்தால் 300 ரயில்களை இயக்கத் தயார்: பியூஷ் கோயல்

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாக செல்வதை தவிர்க்கும்படியும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை அணுகி ரயில்கள் இயக்கம் பற்றி தெரிந்துகொள்ளும்படியும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாள்தோறும் 300 ரயில்கள் இயக்கத் தயாராக இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

  டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாநில அரசுகள் ஒத்துழைத்தால் ரயில்களை இயக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

  மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாக செல்வதை தவிர்க்கும்படியும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை அணுகி ரயில்கள் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ளும்படியும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

  Also see...


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  href="https://www.youtube.com/News18TamilNadu">YouTube

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Indian Railways, Migrant workers, Piyush Goyal