ரயில்வேயில் 50% பணியிடக் குறைப்பு தொடங்கியது.. குறைக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

கொரோனா பொது முடக்கத்தால் ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ளை வருவாய் இழப்பையடுத்து ஆள் குறைப்பை இந்திய ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

ரயில்வேயில் 50% பணியிடக் குறைப்பு தொடங்கியது.. குறைக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ரயில் (கோப்புப்படம்)
  • Share this:
ரயில்வே துறையில் பாதுகாப்பு அல்லாத பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தும் பணி கோட்டவாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கான துறைரீதியிலான சுற்றறிக்கை  கோட்ட மேலாளர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அளிக்கும் பாதுகாப்பு இல்லாத காலிப் பணியிட பட்டியலில் 50% இடங்கள் குறைக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கையால் தென்னக ரயில்வேயில் சுமார் 4 ,000 பணியிடங்கள் உட்பட, நாடு முழுவதும் 60,000 பணியிடங்கள்  குறைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க...


கருப்பர் கூட்டம் வீடியோ விவகாரம்: பாஜக கரு.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் கைது..

கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை காரணம் காட்டி, ஆட்களைக் குறைப்பது கடும் பணிச்சுமை மற்றும் பயணிகள் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும்  இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்  என்று (DREU) ரயில்வே ஊழியர்களின் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading