ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை - ரயில்வே விளக்கம்

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை - ரயில்வே விளக்கம்
  • Share this:
ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மற்றும் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நோயின் மூன்றாவது கட்டமான சமூக பரவலை தடுக்கும் நோக்கில், அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த 24-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, ரயில், விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சரும் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவதால் மீண்டும் ரயில், விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், ரயில் மற்றும் விமானங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மீண்டும் தொடங்குவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ரயில் டிக்கெட் முன்பதிவு ஏப்ரல் 15 முதல் மீண்டும் தொடங்குவதாகக் கூறப்படும் தகவல் தவறு. டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. டிக்கெட் முன்பதிவு என்பது ஒருவர் பயணம் மேற்கொள்வதற்கு 120 நாளுக்கு முன்பிருந்தே செய்யலாம்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையான காலத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 15ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே நடைமுறையில்தான் உள்ளது,’’ என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading