• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை

ஆக்சிஜன் சிலிண்டர்

ஆக்சிஜன் சிலிண்டர்

நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், திரவ ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்செல்வதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், திரவ ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்செல்வதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கொரோனா தொற்று, நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    எனினும், பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு ரயில்வே துறையின் உதவியை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் நாடியுள்ளன. அத்துடன், திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்களை எடுத்து வருவதற்காக சரக்கு ரயில்களை இயக்க கோரிக்கை வைத்தன.

    அதன் அடிப்படையில், நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, சிறப்பு சரக்கு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இந்த டேங்கர் ரயில்கள் இன்று முதல் தங்கள் இயக்கத்தை தொடங்குகின்றன.

    அதன்படி, மும்பை கலாம்போலி, பொய்சார் ரயில் நிலையங்களில் இருந்து காலி டேங்கர் ரயில்கள், ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக விசாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரோ போன்ற இடங்களுக்கு விரைகின்றன.

    அடுத்த சில நாட்கள் ஆக்சிஜன் வினியோக நடவடிக்கைகள் தொடங்கும் என கூறப்படுகின்றது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் நாட்டின் எந்த பகுதியில் ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கூறப்படுகின்றது.

    Must Read :  கொரோனா தடுப்பூசி : மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுரை

     

    இந்நிலையில், 6,177 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்தது என்றும் இதன்படி, மகாராஷ்டிராவுக்கு 1,500 மெட்ரிக் டன், டெல்லிக்கு 350, உத்தரப் பிரதேசத்திற்கு 800 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட உள்ளது என்றும், கொரோனாவுக்கு முன் 1000 முதல் 2000 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் தேவை இருந்ததாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: