ராகுல் காந்தி ஒரு மருத்துவர் அல்ல எனவும் தேவைப்பட்டால் அவருக்கு வென்டிலேட்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கம் தரத் தயார் எனவும் அக்வா நிறுவனம் பதிலளித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளுக்கு தரமற்ற வென்டிலேட்டர்களை, மத்திய அரசு அக்வா தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
Also see:
இதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் பேராசிரியர் திவாகர் வைஷ், ராகுல் காந்தி ஒரு புத்திசாலி மனிதர் என்றாலும் கூட அவர் மருத்துவர் இல்லை. ஆகையால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் முன் அவர் மருத்துவர்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் விருப்பப்பட்டால், தங்கள் நிறுவனத்தின் வென்டிலேட்டர்கள் தரமானவை என்று செய்முறை விளக்கம் செய்து காட்டுவோம் என்றும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.