கொரோனா வைரஸ் பிரச்னை கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் சொல்வது டைட்டானிக் கப்பலின் கேப்டன் பயணிகளிடம் பீதியடையாதீர்கள் எனச் சொல்வது போல இருப்பதாக ராகுல் காந்தில் கிண்டல் செய்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் வந்திருக்கும் நிலையில், இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறும்போது, இந்தியாவில் கொவிட் -19 (கொரோனா வைரஸ் நோய்) தடுப்புக்காக அவசியமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார்.
அவருடைய பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி, இந்திய அரசு கொரோனா வைரஸ் பிரச்னையைக் கட்டுக்கொள்ளும் வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சொல்கிறார். இது டைட்டானிக்கின் கேப்டன் பயணிகளிடம் இந்தக் கப்பல் மூழ்காது; அதனால் பீதியடையாதீர்கள் என்று சொல்வது போல உள்ளது என்று கிண்டல் செய்துள்ளார். மேலும், சரியான செயல்திட்டம் வகுத்து இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
Also Read:
நாளை திருமணம்... நள்ளிரவில் மணமகன் படுகொலை
கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகரின் மகன் கைது!
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also See...
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.